தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டி முடிவுகள்

தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டி முடிவுகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல், எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. ‘ஒரு குரல் ஒரு குறள்’ போட்டியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டதன் காரணமாக இப்போட்டி 2 பிரிவுகளாகப் பின்னர் பிரிக்கப்பட்டது.