‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

 1. 18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் கலந்துகொள்ளலாம்.
 2. ‘தமிழால் நான்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும்.
 3. பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
 4. காணொலி படுக்கை [Landscape Mode] வாட்டில் இருக்க வேண்டும்.
 5. போட்டியாளரின் இடுப்பு வரையில் காணொலிப் பதிவு இருக்க வேண்டும்.
 6. போட்டியாளர் தனது பெயர், ஊர் ஆகியவற்றைக் கூறிய பின் பேசத் தொடங்க வேண்டும்.
 7. குறைந்தது 5 கருத்துகள், விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் தற்காலச் சூழலுக்கு ஏற்றதாக இருப்பது நல்லது.
 8. நாட்டின் சட்டதிட்டம், தலைவர்கள், தனியாட்கள், மொழி, இனம், மதம், பண்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைச் சாடும் வகையில் பேசுதல் கூடாது.
 9. காணொலியில் தொடக்கம், இடையில் அல்லது இறுதியில் எந்தவித [EDIT/GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
 10. காணொலி நேரம் 5 நிமிடம் மட்டுமே.
 11. ஒரு போட்டியாளர் ஒரு காணொலி மட்டுமே அனுப்ப முடியும்.
 12. போட்டியாளர் பண்பாட்டு அல்லது அலுவல் உடை அணியலாம்.
 13. பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_tamilalnaan_<participant’s name> எனத் தலைப்பிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 14. உங்கள் முகநூல் அல்லது வலையொளியில் பதிவேற்றிய காணொலியின்  இணைப்பைக் (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
 15. கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
 16. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_tamilalnaan
 17. கருத்து (20%), மொழிவளம் (20%) உச்சரிப்பு (20%), தொனி (20%), ஈர்ப்புத் தன்மை (15%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
 18. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
 19. காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
 20. தமிழ்க்கல்வி வலையொளியில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
 21. முதல் பரிசு RM300. 2ஆம் பரிசு RM200. 3ஆம் பரிசு RM150. 7 ஆறுதல் பரிசுகள் தலா RM100.
 22. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
 23. போட்டிக்கான இறுதி நாள் :- 09.10.2021
 24. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் யாவரும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ஆதரவு நல்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

2 Replies to “‘தமிழால் நான்’ பேச்சுப் போட்டி -பொது மக்களுக்கான போட்டி”

 1. Hi admin,just nee d to confirm thst day my daughter participated but haven’t receive any ‘Sijil penyertaan’.
  Kindly advise.

  Thanks
  Sara

  1. Sara……போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மின் சான்றிதழ் அனுப்புவோம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *