மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லூடகக் காணொலிப் படைப்புப் போட்டி [Multimedia Video Competition] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி [TING 6/IPT/IPG] மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-
- இப்போட்டியில் ஆறாம் படிவம் / உயர்க்கல்வி [Tingkatan 6 / IPT / IPG] மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
- பல்லூடகக் காணொலிப் [Multimedia Video] படைப்பு ஒன்றனை உருவாக்கி அனுப்ப வேண்டும்.
- தலைப்பு : ‘முந்து தமிழும் முந்தும் தமிழும்’.
- பல்லூடகச் [Multimedia] செயலிகளைப் பயன்படுத்தி காணொலிப் படைப்பை உருவாக்க வேண்டும்.
- காணொலியின் தொடக்கத்தில் தலைப்பு, போட்டியாளரின் பெயர், வயது, கல்விக்கழகப் பெயர் ஆகியவை இடம்பெற வேண்டும்.
- மொத்தம் 6 கருத்துகள் ஏற்ற விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் இடம்பெற வேண்டும்.
- குரல் பதிவு [Voice Recording], படங்கள் [Images], அசைவூட்டம் [Animation], வரைகலை [Graphics] ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
- பொருத்தமான பின்னணி இசையைப் பயன்படுத்தலாம்; பாடலைப் பயன்படுத்தக் கூடாது.
- படைப்பினைக் காணொலியாகப் [MPEG-4 Video-720p And Above] பதிவு செய்ய வேண்டும்.
- காணொலி நேரம் 7 நிமிடம் மட்டுமே.
- ஒரு போட்டியாளர் ஒரு காணொலி மட்டுமே அனுப்ப முடியும்.
- நாட்டின் சட்டதிட்டம், தலைவர்கள், தனியாட்கள், மொழி, இனம், மதம், பண்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைச் சாடும் வகையில் படங்களோ அல்லது கருத்துகளோ இடம்பெறக் கூடாது.
- பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_iptkanoli_<participant’s name> எனத் தலைப்பிட்டுப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- உங்கள் முகநூல் அல்லது வலையொளியில் பதிவேற்றிய காணொலியின் இணைப்பைக் (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_iptkanoli
- கருத்து (30%), ஆக்கம் / படைப்புத்திறன் (30%), மொழிவளம் (15%), நேர்த்தி (10%), ஈர்ப்புத் தன்மை (10%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
- நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
- காணொலியை விருப்பம் [Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
- தமிழ்க்கல்வி வலையொளியில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
- முதல் பரிசு RM200. 2ஆம் பரிசு RM150. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசுகள் தலா RM50.
- போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
- போட்டிக்கான இறுதி நாள் :- 19.09.2021
- நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
உயர்க்கல்வி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து சிறப்பிக்க என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.