மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-
- புகுமுக வகுப்பு முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
- ‘தமிழ்க்கல்வியின் அவசியம்’ என்ற தலைப்பில் போட்டியாளர் பேச வேண்டும்.
- பேச்சினைக் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
- காணொலி படுக்கை [Landscape Mode] வாட்டில் இருக்க வேண்டும்.
- போட்டியாளரின் இடுப்பு வரையில் காணொலிப் பதிவு இருக்க வேண்டும்.
- போட்டியாளர் தனது பெயர், வயது, பள்ளிப் பெயர் ஆகியவற்றைக் கூறிய பின் பேசத் தொடங்க வேண்டும்.
- குறைந்தது 4 கருத்துகள், விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் தற்காலச் சூழலுக்கு ஏற்றதாக இருப்பது நல்லது.
- நாட்டின் சட்டதிட்டம், தலைவர்கள், தனியாட்கள், மொழி, இனம், மதம், பண்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைச் சாடும் வகையில் பேசுதல் கூடாது.
- காணொலியில் தொடக்கம், இடையில் அல்லது இறுதியில் எந்தவித [EDIT/GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
- காணொலி நேரம் 5 நிமிடம் மட்டுமே.
- ஒரு போட்டியாளர் ஒரு காணொலி மட்டுமே அனுப்ப முடியும்.
- போட்டியாளர் பள்ளிச் சீருடை அல்லது பண்பாட்டு உடை அணியலாம்.
- பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_peccupotti_<participant’s name> எனத் தலைப்பிட்டுப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- உங்கள் முகநூல் அல்லது வலையொளியில் பதிவேற்றிய காணொலியின் இணைப்பைக் (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
- கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_peccupotti
- கருத்து (20%), மொழிவளம் (20%) உச்சரிப்பு (20%), தொனி (20%), ஈர்ப்புத் தன்மை (15%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
- நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
- காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
- தமிழ்க்கல்வி வலையொளியில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
- முதல் பரிசு RM200. 2ஆம் பரிசு RM150. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசுகள் தலா RM50.
- போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
- போட்டிக்கான இறுதி நாள் :- 19.09.2021
- நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.
I have done
Very useful event for Students
My Tamil Kalvi
Teacher the peccupoti URL is not working to fill the google drive
Sarmitha… பேச்சுப் போட்டி இணைப்பு சரியாக இயங்குகிறது.