சிறுவர் பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 1]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டுச் ‘சிறுவர் பாடல் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி படிநிலை 1 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

 1. 7 – 9 வயது வரையிலான படிநிலை 1 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
 2. சிறுவர் பாடல் ஒன்றனைத் தெரிவு செய்து பாட வேண்டும்.
 3. சிறுவர் பாடல் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும்.
 4. திரைப்படப் பாடலைப் பாடுதல் கூடாது.
 5. பின்னணி இசை பயன்படுத்தக் கூடாது.
 6. பாடலைப் பாடி காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
 7. காணொலி படுக்கை [Landscape Mode] வாட்டில் இருக்க வேண்டும்.
 8. போட்டியாளரின் இடுப்பு வரையில் காணொலிப் பதிவு இருக்க வேண்டும்.
 9. காணொலியில் எந்தவித [EDIT/ GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
 10. போட்டியாளர் தனது பெயர், வயது, பள்ளிப் பெயர், பாடலின் தலைப்பு ஆகியவற்றைக் கூறிய பின் பாடத் தொடங்க வேண்டும்.
 11. நேரம் 2 நிமிடம் மட்டுமே.
 12. போட்டியாளர் பள்ளிச் சீருடை அல்லது பாடலின் கருப்பொருளுக்கு ஏற்ற உடை அணியலாம்.
 13. பதிவு செய்த காணொலியை உங்கள் முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi205_siruvarpaadal_<participant’s name> எனத் தலைப்பிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 14. உங்கள் முகநூல் அல்லது வலையொளியில் பதிவேற்றிய காணொலியின்  இணைப்பைக் (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
 15. கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
 16. கூகிள் படிவ (Google Form) இணைப்பு :- http://tiny.cc/mytk205_siruvarpaadal
 17. குரல் இனிமை (20%), பாவனை (25%), ஆக்கத்திறன் (25%), உச்சரிப்பு (25%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
 18. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
 19. காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
 20. தமிழ்க்கல்வி வலையொளியில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
 21. முதல் பரிசு RM150. 2ஆம் பரிசு RM120. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசு தலா RM50. போட்டியாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
 22. போட்டிக்கான இறுதி நாள் :- 12.09.2021
 23. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

தொடக்கப் பள்ளி படிநிலை 1 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

32 Replies to “சிறுவர் பாடல் போட்டி [தொடக்கப்பள்ளி படிநிலை 1]”

 1. போட்டியின் முடிவுகளை எப்பொழுது தெரிவிக்கப்படும்?

 2. விருப்ப எண்ணிக்கையில் வெற்றியாளர்கள் தேந்தெடுக்கப்படுவாரெனில் எதற்கு நடுவர் குழு?
  இது தங்களின் வலையொலியை விளம்பரப்படுத்துவதற்கா…. ?
  பிள்ளைகளின் திறமையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுப்பதில்லையா… நடுவர்களுக்கு வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க இயலாதா?
  இது முறையற்ற போட்டியாயிற்றே…

  1. Selvam….வணக்கம். தங்கள் கருத்து சரியே. கண்டிப்பாகப் பிள்ளைகளின் திறமைக்கே முதலிடம். திறமையான பிள்ளைகளை உருவாக்குவதே நமது நோக்கம். ஆகவே, திறமைக்கு மொத்தமாக 95%. விருப்ப எண்ணிக்கைக்கு மிகக் குறைவான 5% மட்டுமே. இதில் விளம்பரம் தேடுவதற்கு ஒன்றுமில்லை. அவசியமும் இல்லை. நமது போட்டிகளில் பொது மக்களுக்கும் ஒரு சிறு பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விருப்ப எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் இது இயல்பான ஒன்றுதான். விருப்பம் போடுபவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் வாக்களிக்கும் பண்பாடும் நேர்மையும் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    1. Madam Kunavathi.. மதிப்பீட்டுப் பணிகள் நடக்கின்றன. முடிந்த பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.

 3. Sir. Sorry to say i sent wrong video link. After that i send original video link under name kashzmiraa a/p Ravindran sir.
  Tq

 4. Hi Good morning teacher I’m LambertSuseynathan and I love to join this programme. I’m going to sing a nice children’s song. Hope everyone like and enjoy it. Thanks alot 🙏

   1. Vanakkam teacher. When is the results will be out? We have been waiting past two months for the result. At least please tell the announcement date. Thanks

  1. இந்த காணொளி🎥 மிகவும் நன்றாக உள்ளது இந்த வீடியோவை நான் விரும்புகிறேன் மற்றும் இந்த வீடியோவை நான் விரும்புகிறேன் யாருக்கும் இந்த வீடியோ கிடைத்தால் தயவுசெய்து பகிருங்கள் இந்த வீடியோவிற்கு நன்றி😘😍

 5. Hi this is very interesting and intelligent competition so my friends and me also very appreciated this competition.thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *