குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ‘குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிக் குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

  1. 4 – 6 வயது வரையிலான மழலையர் பள்ளிக் குழந்தைகள் இதில் கலந்துகொள்ளலாம்.
  2. கொடுக்கப்பட்ட 10 குறள் ஓவியங்களுள் ஏதேனும் ஒன்றனை மட்டும் தெரிவுசெய்ய வேண்டும்.
  3. குறள் ஓவியத்தை மலேசியத் தமிழ்க்கல்வி இணையத் தளத்தில் [ https://malaysiatamilkalvi.com ] பதிவிறக்கம் செய்யலாம்.
  4. குறள் ஓவியத்தை A4 தாளில் அச்சு [Print]  எடுக்க வேண்டும்.
  5. போட்டியாளர் தெரிவுசெய்த குறள் ஓவியப் படத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும்.
  6. வண்ணம் தீட்டிய ஓவியத்தை மின்வருடி [Scan] அல்லது கைப்பேசியில் தெளிவாகப் படம் பிடிக்க வேண்டும்.
  7. அப்படத்தில் எந்தவித [EDIT / FILTER] மாற்றமும் செய்யக் கூடாது.
  8. படம் [JPEG Format] அமைப்பில் இருக்க வேண்டும்.
  9. படத்தை உங்கள் முகநூல் (Facebook) பக்கத்தில் #mytamilkalvi205_kuraloviyam_<participant’s name> எனத் தலைப்பிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  10. அந்தப் பதிவின் இணைப்பை (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
  11. முகநூல் இல்லாதவர்கள் வண்ணம் தீட்டிய ஓவியத்தைக் கூகிள் படிவத்தில் இணைத்து [Add File] அனுப்ப வேண்டும்.
  12. கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப வேண்டும்.
  13. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_kuraloviyam
  14. வண்ணத் தெரிவு (25%), பின்னணி (25%), ஈர்ப்புத் தன்மை (25%), நேர்த்தி (20%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
  15. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 ஓவியங்கள் மலேசியத் தமிழ்க்கல்வி முகநூலில் [Malaysia Tamil Kalvi Facebook] பதிவேற்றம் செய்யப்படும்.
  16. ஓவியத்தை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள்கள் வழங்கப்படும்.
  17. மலேசியத் தமிழ்க்கல்வி முகநூலில் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
  18. முதல் பரிசு RM150. 2ஆம் பரிசு RM120. 3ஆம் பரிசு RM100. 7 ஆறுதல் பரிசுகள் தலா RM50. போட்டியாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
  19. போட்டிக்கான இறுதி நாள் :- 12.09.2021
  20. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

மழலையர் பள்ளிக் குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

42 Replies to “குறள் ஓவியம் – வண்ணம் தீட்டும் போட்டி [மழலையர் பள்ளி]”

  1. போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டதா… ஏன் இன்னும் நற்சான்றிதழ் வழங்கப்படவில்லை… தயவுசெய்து நற்சான்றிதழ் உடனடியாக அனுப்பி வைக்கவும்

    1. Vanakkam teacher, Im join kural ooviyam potti I’m upload ready but I’m how no I’m upload ready please tell me.

Leave a Reply to Susheeladewi A/P Krishnamurty Cancel reply

Your email address will not be published. Required fields are marked *