தமிழ்க்கல்வி இலச்சினை உருவாக்கும் போட்டி முடிவுகள்

மலேசியத் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட இலச்சினை உருவாக்கும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டிக்காக 58 இலச்சினைகள் வந்திருந்தன. அவற்றிலிருந்து 8 சிறந்த இலச்சினைகள் நடுவர் குழுவினரால் இறுதிச் சுற்றுக்குத் தேர்தெடுக்கப்பட்டன. மலேசியத் தமிழ்க்கல்வி முகநூல் பக்கத்தில் அந்த 8 இலச்சினைகள் பொதுமக்களின் விருப்பத் தேர்வுக்கு முன்வைக்கப்பட்டன.

நடுவர் குழுவின் 95% புள்ளிகளோடு முகநூல் விருப்பத்திற்கான 5% புள்ளிகளும் சேர்க்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்படி வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

முதல்நிலையில் வெற்றிபெற்ற இலச்சினை 2021இல் மலேசியத் தமிழ்க்கல்வி விழாவின் அதிகாரப்படியான இலச்சினையாகப் பயன்படுத்தப்படும்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். மேலும், கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *