மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா அறிவிப்பு

டத்தோ.ப.கமலநாதன்
ஏற்பாட்டுக் குழுத் தலைவர்,
மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா

வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு நிறைவைக் காண்கின்றது.

அதனை முன்னிட்டு, 21.07.2021 தொடங்கி 31.10.2021 வரை 3 மாதக் காலத்திற்கு ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக,  முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன் தலைமையில் ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியக் கல்வி அமைச்சின் அனுமதியோடும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் மற்றும் மலாயாத் தமிழ்ப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவோடும் இவ்வாண்டுக்கான விழா நடைபெறும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு மழலையர் பள்ளி தொடங்கி உயர்க்கல்வி வரையில் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல தமிழாசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெறும். தவிர, இலச்சினை உருவாக்கும் போட்டி, தமிழ்க்கல்வி மேடை, பள்ளி அளவிலான கொண்டாட்டம், அனைத்துலக மாநாடு எனப் பல சிறப்பு நிகழ்ச்சிகள் திட்டத்தில் உள்ளன. இவை தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பெறும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி 21.10.1816ஆம் நாள் பினாங்கு பொதுப் பள்ளியில் [Penang Free Schoo] தொடங்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில், மலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் வெகுச் சிறப்புடன் நடைபெற்றது. அதேபோல 2020இல் 204ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

நாம் மிகவும் நேசிக்கும் நம் மலேசிய நாட்டில் நமது தாய்மொழியாம் தமிழ்மொழி நிலைத்து இருப்பதற்குத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மிக முக்கியக் காரணம் என்றால் மிகையாகாது.

எனவே, ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா” நன்முறையில் நடைபெற மலேசியத் தமிழ்ப்பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ்க் கல்வியாளர்கள், தமிழ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஊடகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் சங்கம், தமிழ் இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டுகிறேன்.

வாழ்க தமிழ்ப்பள்ளி; வளர்க தமிழ்க்கல்வி

நன்றி வணக்கம்.

ஏற்பாடு :-

மலேசியாவில் தமிழ்க்கல்வி 205ஆம் ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழு

அனுமதி :- மலேசியக் கல்வி அமைச்சு

இணை ஆதரவு:-

மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம்

மலாயாத் தமிழப்பள்ளித் தமிழாசிரியர் சங்கம்

இணையத் தளம்:- https://malaysiatamilkalvi.com

வலையொளி :- https://www.youtube.com/c/malaysiatamilkalvi/

முகநூல் [Facebook]:- https://www.facebook.com/MalaysiaTamilKalvi/

மின்னஞ்சல் [e-mail]:- malaysiatamilkalvi@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *