
மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல், எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை.
‘ஒரு குரல் ஒரு குறள்’ போட்டியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டதன் காரணமாக இப்போட்டி 2 பிரிவுகளாகப் பின்னர் பிரிக்கப்பட்டது. 4 – 6 வயது சிறுவர்களுக்காக மழலையர் பிரிவு மற்றும் 7 – 9 வயது மாணவர்களுக்காகத் தொடக்கப்பள்ளிப் பிரிவு என ‘ஒரு குரல் ஒரு குறள் போட்டி’ இரண்டு பிரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இப்போட்டியில் ஆர்வத்தோடு பங்கேற்ற சிறுவர்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. இதன்வழி அதிகாமான சிறுவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றனர். வெற்றியாளர்கள் எண்ணிக்கையும் பத்திலிருந்து இருபதாக அதிகரிக்கப்பட்டது.
நளிநயப் பாடல் போட்டியில் மாணவர்களின் படைப்புத் திறன் வெகுச் சிறப்பாக அமைந்திருந்தைக் காணொலிகள் வழியாகக் காண முடிந்தது. இப்போட்டிக்காக ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையும் சிரத்தையும் எடுத்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
எனக்குத் தமிழ் சோறு போடுகிறது போட்டியில் 15 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். மொத்தத்தில், தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிக்காக 2500 பங்கேற்புகள் வந்தது மகிழ்ச்சியளிக்கும் சாதனையாக அமைந்தது எனலாம்.
மின்னியல் முறையில் காணொலி வடிவத்தில் இணைய வழியாக நடந்த தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகளின் முடிவுகள் இங்கே அதிகாரப்படியாக அறிவிக்கப்படுகின்றன.




இதற்கிடையில், தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டியில் தேர்வுபெற்று தமிழ்க்கல்வி வலையொளியில் இடம்பெற்ற சிறந்த காணொலிகளுக்கும் மற்றும் மின்புதிர் போட்டியின் வெற்றியாளர்களுக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.