காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு 3 காணொலிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு குரல் ஒரு குறள், நளிநயப் பாடல் மற்றும் எனக்குத் தமிழ் சோறு போடுகிறது ஆகிய போட்டிகளே அவை. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த காணொலிகளுக்கு விருப்பம் [Like] தெரிவிக்கலாம். 6.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 தொடங்கி 13.11.2020 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 12:00 வரையில் பொதுமக்கள் விருப்பம் [Like] போடலாம்.

இப்போட்டிகளுக்கு வந்திருந்த 2500 காணொலிகளில் மிகச் சிறந்த காணொலிகள் வலையொளி [Malaysia Tamilkalvi YouTube] மூலமாக பொதுமக்கள் பார்வைக்கும் விருப்பத்திற்கும் வழங்கப்படவுள்ளன.

மொத்தம் 4 பிரிவுகளாக காணொலிகள் வலையொளியில் வழங்கப்படும்.

பிரிவு 1 – ஒரு குரல் ஒரு குறள் [மழலையர் பள்ளிப் பிரிவு]

பிரிவு 2 – ஒரு குரல் ஒரு குறள் [தொடக்கப்பள்ளிப் பிரிவு]

பிரிவு 3 – நளிநயப் பாடல்

பிரிவு 4 – எனக்குத் தமிழ் சோறு போடுகிறது

பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த காணொலிகளுக்கு விருப்பம் [Like] போடலாம். நடுவர்கள் வழங்கும் 90% புள்ளியுடன் பொதுமக்கள் விருப்பம் [Like] மூலம் 10% புள்ளியும் சேர்க்கப்பட்டு பின்னர் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பரிசு விவரம்:-

முதல் பரிசு : RM300.00

இரண்டாம் பரிசு : RM200.00

மூன்றாம் பரிசு : RM150.00

7 ஆறுதல் பரிசுகள் : தலா RM100.00

உங்கள் விருப்பங்களைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

One Reply to “காணொலிப் போட்டிகள் வலையொளி விருப்பம் [YouTube Like]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *