மலேசியாவில் தமிழ்க்கல்வி இயங்கலைப் பன்னாட்டு மாநாடு எதிர்வரும் 31.10.2020 சனிக்கிழமை மாலை மணி 6:00 முதல் இரவு மணி 10:30 வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வலையொளி [YouTube] வழியாக நேரலையில் ஒலிபரப்பாகும்.
மலேசியா உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா, சப்பான், சிங்கப்பூர், மியான்மா, கம்போடியா, குவைத், தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பேச்சாளர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தமிழர்கள் தங்களின் பங்கேற்பைப் பற்றி காணொலி வாயிலாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் காணொலித் தொகுப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.