விவாத மேடை – இயங்கலை நிகழ்ச்சி

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழாவினை முன்னிட்டு ‘விவாத மேடை’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ப.கமலநாதன் தலைமையில் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்த்திரு க.முருகையன் நடுவராகச் செயல்படும் வேளையில் 6 தரப்பிலிருந்து பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.

நாள் : 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : இரவு மணி 8:00

தளம் : வலையொளி (YouTube):- Malaysia Tamilkalvi மற்றும் முகநூல் (Facebook) MalaysiaTamilKalvi

தலைப்பு : தமிழை வாழ வைப்பதில் முதலிடம் யாருக்கு?

பேச்சாளர்கள்:-

பெற்றோருக்கு:- திரு.ஜெயசீலன் இராஜு – பெ.ஆ.சங்கத் தலைவர்
ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி

ஆசிரியர்களுக்கு:- திருமதி.தீபா பூங்காவனம் – தமிழாசிரியர்
நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி

எழுத்தாளர்களுக்கு :- திரு.பெ.இராஜேந்திரன் – தலைவர்,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

தலைவர்களுக்கு:- திரு.சீரே சந்திரதேவன் நிலவன்- தலைவர்
ஊலு லங்காட் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி

தமிழ் அறிஞர்களுக்கு:- வழக்கறிஞர் இரா.கனல்வீரன் – தேசிய செயலாளர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

ஊடகத்தாருக்கு:- திருமதி.பொன் கோகிலம் – மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையம் (RTM)

இந்த விவாத மேடை நிகழ்ச்சியை வலையொளி மற்றும் முகநூல் தளங்களில் நேரலையாகக் கண்டு களிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *