இலண்டன் பல்கலைகழகத்தின் (School Of Oriental And African Studies) தமிழ்த்துறை (Tamil Studies UK ஏற்பாட்டில் இயங்கலை வாயிலாகச் சான்றோர் சந்திப்பு எனும் தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் 20ஆவது தொடரில் மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் கல்வித் துணையமைச்சரும் இந்நாள் லாபுவான் துறைமுக வாரியத் தலைவருமான டத்தோ ப.கமலநாதன் கலந்துகொண்டு பேசவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி வருகின்ற 10.10.2020ஆம் நாள் சனிக்கிழமை மலேசிய நேரம் இரவு மணி 9:00க்கு நடைபெறும். மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டு விழா பற்றி டத்தோ ப.கமலநாதன் உரையாற்றுவார்.
1816ஆம் ஆண்டில் மலேசியாவில் முதன்முதலாகத் தமிழ்க்கல்வி பினாங்கு பொதுப் பள்ளியில் தொடங்கியது. இந்த 2020இல் மலேசியத் தமிழ்க்கல்வி 204 ஆண்டு நிறைவைக் காண்கின்றது. அதனைக் கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழுவிற்கு டத்தோ ப.கமலநாதன் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.
மலேசியாவில் தமிழ்க்கல்வி 204 ஆண்டுகள் விழா தொடர்பான விவரங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி அவர் பேசுவார்.
இந்த நிகழ்ச்சி இயங்கலையில் நடைபெறுவதால் இதில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்ய: https://forms.gle/524Le1aQYQW2zzZy7
உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.
Date : புரட்டாசி 24, சனிக்கிழமை (Saturday, 10th October 2020)
Time: 2PM (London), 6.30PM (Chennai/Jaffna), 6AM (Los Angeles), 9AM (New York), 9PM (Kula Lumpur / Singapore), 10PM (Tokyo)
Zoom Meeting Link: https://us02web.zoom.us/j/88233102574?pwd=clZOVmYwK25QS3pOTGVWZ3JmZzU0dz09
Meeting ID: 882 3310 2574
Password: soaslondon
இந்த நிகழ்ச்சி வலையொளி (YouTube) மற்றும் முகநூல் (Facebook) வழியாக நேரலையாக ஒலிபரப்பாகும்.
தமிழ் வாழ்க.