தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 3 வகையான காணொலிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காணொலிப் போட்டி-1

‘ஒரு குரல் ஒரு குறள்’ – சிறுவர் காணொலிப் போட்டி

*** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் ***

  1. நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை
  2. 4 வயது முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
  3. போட்டியாளர் ஒரு குறளையும் அதன் பொருளையும் சரியான உச்சரிப்பு, வேகம், தொனி, சரளம், பாவனை மற்றும் ஈர்ப்புடன் ஒப்புவிக்க வேண்டும்.
  4. போட்டியாளர் பெயர், வயது, பள்ளி, அதிகாரம், குறள் எண் ஆகியவற்றைக் கூறிய பின் குறளையும் பொருளையும் ஒப்புவிக்க வேண்டும்.
  5. நேரம் 2 நிமிடம் மட்டுமே.
  6. காணொலியாகப் பதிவு செய்து முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi204_kural_<participant’s name> எனக் குறியிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  7. அதன் இணைப்பை (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
  8. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk204_kural
  9. உச்சரிப்பு (30%), வேகம், தொனி, சரளம் (30%), பாவனை, படைப்பாற்றல் (30%), விருப்பம்[Likes] (10%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
  10. இக்காணொலிப் போட்டிக்கான இறுதி நாள் :- 10.10.2020
  11. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
  12. காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள் வழங்கப்படும்.
  13. முதல் பரிசு RM300. 2ஆம் பரிசு RM200. 3ஆம் பரிசு RM150. 7 ஆறுதல் பரிசு தலா RM100
  14. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

காணொலிப் போட்டி-2

‘நளிநயப் பாடல்’ (ACTION SONG) காணொலிப் போட்டி

*** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் ***

  1. நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை
  2. தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
  3. ஒரு குழுவில் 8 – 10 மாணவர்கள் இடம்பெறலாம்.
  4. தமிழ்மொழி, மாணவர், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய கருப்பொருளில் அமைந்த 1-3 பாடல்களைத் தெரிவுசெய்து நளிநயப் பாவனை செய்ய வேண்டும். (நடனமாடக் கூடாது).
  5. தனிப்பாடல், திரைப்பாடல், உள்ளூர் பாடல், சொந்தப் பாடல் பயன்படுத்தலாம்.
  6. பொருத்தமான உடை மற்றும் துணைப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.
  7. காணொலியின் தொடக்கத்தில் பள்ளியின் பெயர் தமிழ் மற்றும் மலாய் மொழியில் இடம்பெற வேண்டும்.
  8. நேரம் 4 நிமிடம் மட்டுமே.
  9. காணொலியாகப் பதிவு செய்து முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi204_actionsong_<school name>  எனக் குறியிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  10. அதன் இணைப்பை (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
  11. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk204_actionsong
  12. படைப்பாற்றல் (50%), குழு சீர்மை (20%), உடை / துணைப்பொருள் (10%), பாடல் தெரிவு (10%), விருப்பம் [Likes] (10%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
  13. இக்காணொலிப் போட்டிக்கான இறுதி நாள் :- 10.10.2020
  14. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
  15. காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள் வழங்கப்படும்.
  16. முதல் பரிசு RM300. 2ஆம் பரிசு RM200. 3ஆம் பரிசு RM150. 7 ஆறுதல் பரிசு தலா RM100
  17. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

காணொலிப் போட்டி-3

‘எனக்குத் தமிழ் சோறு போடுகிறது’ காணொலிப் போட்டி

*** போட்டி விதிமுறையும் வழிகாட்டியும் ***

  1. நாள் : 25.09.2020 முதல் 10.10.2020 வரை
  2. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம்.
  3. ‘எனக்குத் தமிழ் சோறு போடுகிறது’ எனும் தலைப்பில் பேசி அதனைக் காணொலியாகப் பதிவு செய்ய வேண்டும்.
  4. போட்டியாளர் பெயரைக் கூறிய பின் பேசத் தொடங்கலாம்.
  5. நேரம் 2:04 நிமிடம் மட்டுமே.
  6. காணொலியாகப் பதிவு செய்து முகநூல் (Facebook) அல்லது வலையொளி (Youtube) தளத்தில் #mytamilkalvi204_tamilsoru_<participant’s name> எனக் குறியிட்டுப்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  7. அதன் இணைப்பை (Link) கூகிள் படிவம் மூலம் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
  8. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk204_tamilsoru
  9. கருத்து (50%), மொழிவளம் (20%) படைப்பாற்றல் (20%), விருப்பம் [Likes] (10%) அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.
  10. இக்காணொலிப் போட்டிக்கான இறுதி நாள் :- 10.10.2020
  11. நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50 காணொலிகள் தமிழ்க்கல்வி வலையொளியில் [Malaysia Tamil Kalvi Youtube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
  12. காணொலியை விருப்பம்[Like] செய்வதற்கு 7 நாள் வழங்கப்படும்.
  13. முதல் பரிசு RM300. 2ஆம் பரிசு RM200. 3ஆம் பரிசு RM150. 7 ஆறுதல் பரிசு தலா RM100
  14. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

மேலதிக விவரங்களுக்கும் தொடர்புக்கும்:-

இணையத்தளம் : malaysiatamilkalvi@gmail.com

வலையொளி : https://www.youtube.com/watch?v=zTMD0qxrCq8

25 Replies to “தமிழ்க்கல்விக் காணொலிப் போட்டிகள்”

  1. வணக்கம்.
    காணொலிப் போட்டி முடிவுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
    Video Competition result…. Soon… Please wait. Tq.

  2. வணக்கம் ஐயா. நளிநயப் போட்டி தொடர்பான சில கேள்விகள் உள்ளன.
    1. பாடலுக்கிடையே கருத்து கூறுவது போல் (dialogues) அடிப்படையில் அமையலாமா?
    2. இறுதி நாள் நீட்டிக்க வாய்ப்பு ஏதேனும் உள்ளதா ஐயா?
    தயவு செய்து விளக்கமளிக்கவும் ஐயா. நன்றி.

    1. @சாலினி,
      1.உரையாடல் மிக மிக குறைவாக இருக்கலாம். குழு இணைப் பேச்சு (Choral Speking) போல மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
      2.இறுதி நாள் நீட்டிக்கப்படாது.
      நன்றி.

  3. வணக்கம் ஐயா. ஒரு குரல் ஒரு குறள் போட்டியில் பள்ளி சீருடை அல்லது வேடம் போடலாம?

  4. வணக்கம் ஐயா. ஒரு குரல் ஒரு குறள் போட்டிக்கு ஒரு பள்ளியிலிருந்து சுமார் எத்தனை காணொளிகளை அனுப்பலாம்? இதற்கு ஏதேனும் வரையறை உண்டா ஐயா?

    1. @உமாகேஸ்வரி,
      எந்த வரையறையும் இல்லை. எத்தனை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
      நன்றி.

  5. வணக்கம் ஐயா. மாணவர்கள் தமிழ்மொழி, மாணவர், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய கருப்பொருளில் 3 கருப்பொருளைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் தொடர்பான ஒரு பாடலுக்கு நணிநயப் பாவனைச் செய்யலாமா? அல்லது ஏதாகிலும் ஒரு கருப்பொருளைத் தெரிவு செய்து அது தொடர்பான மூன்று பாடல்கள் வரை நளிநயப்பாவனைச் செய்ய வேண்டுமா? தயவு செய்து விளக்கமளியுங்கள். நன்றி ஐயா.

    1. @சாந்தினி,
      கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு கருப்பொருளை மட்டும் தெரிவு செய்யவும்.
      பாடல்கள் 1 -3 இருக்கலாம்.
      நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே.
      நன்றி.

  6. நளிநயப் பாடல் என்பது என்ன. மாணவர்கள் பாடலைப் பாட வேண்டுமா அல்லது ஒலிபரப்பப்படும் பாடலுக்கு பாவனை மட்டும் செய்ய வேண்டுமா. விளக்கம் தேவை

    1. @கோகிலா
      ஒலிபரப்பப்படும் பாடலுக்கு ஏற்ப கவரும் வகையில் பாவனைகள், அசைவுகள், நகர்வுகள் செய்யலாம். நடனமாடுதல் கூடாது. வலையொளி தளத்தில் Action Song என்று தேடிப் பார்த்து தகவல் அறியலாம்.
      நன்றி.

    1. @Chendra
      தமிழ்மொழி, மாணவர், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய கருப்பொருளில் அமைந்த 1-3 பாடல்களைத் தெரிவுசெய்து நளிநயப் பாவனை செய்ய வேண்டும். (நடனமாடக் கூடாது).
      தனிப்பாடல், திரைப்பாடல், உள்ளூர் பாடல், சொந்தப் பாடல் பயன்படுத்தலாம்.

    1. Yogadarshene a/p Ravi
      11 and 12 years students can take part in Action Song. நளிநயப் பாடல் போட்டி தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டி. தொடக்கப்பள்ளி[Primary School] பயிலும் 7 – 12 வயது மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். நன்றி.

    1. @Annam A/P Sannasy
      11 & 12 years old kids can take part in Action Song [நளிநயப் பாடல் காணொலிப் போட்டி].

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *